Group 2 / 2A · 2017குரூப் 2 / 2A · 2017
TNPSC Group 2 / 2A 2017 — question paper with answers — page 2 of 12TNPSC குரூப் 2 / 2A 2017 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2017 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2017 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2017exam yearதேர்வு ஆண்டு
-
கள்ள வேடம் புனையாதே – பல கங்கையில் உன்கடம் நனையாதே
–இதில் 'கடம்' என்பதன் பொருள்- உடம்பு✓
- கால்கள்
- கைகள்
- தலை
-
Which one of the organisation organised the Gyan Sangam [Knowledge Summit] in New Delhi on March, 2017?புது டில்லியில் 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எந்த அமைப்பு க்யான் சங்கம் மாநாட்டினை [அறிவு உச்சி மாநாடு] நடத்தியது?
- Prajna Parvahபிரஜ்னா பார்வா✓
- Christian Education Societyகிறிஸ்துவ கல்வி கழகம்
- Students Islamic Movement of Indiaஇந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம்
- Democratic Youth Federation of Indiaஇந்திய ஜனநாயக வாலிபர் அமைப்பு
-
"எதிருன்றல் காஞ்சி, எயில் காத்தல் நொச்சி" – இதில் நொச்சி என்பது
- மதில் காத்தல்✓
- மதில் வளைத்தல்
- மதில் பூக்குடல்
- மதில்வாகை சூடல்
-
Calculate the dimensions of Planck's constant 'h', using the equation E=hγ, where E → energy and γ → frequencyE=hγ என்ற சமன்பாட்டை பயன்படுத்தி, பிளாங்க் மாறிலி 'h'ன் பரிமாணத்தைக் கணக்கிடுக. இங்கு E → ஆற்றல், γ → அதிர்வெண்
- MLT⁻¹MLT⁻¹
- ML²T⁻¹ML²T⁻¹✓
- ML⁻¹T⁻²ML⁻¹T⁻²
- ML⁻²T⁻¹ML⁻²T⁻¹
-
ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தை கைக் கொண்டு வாழவிடுவதே தருமம்" – எனக் கூறியவர்
- இராணி மங்கம்மாள்✓
- அஞ்சலையம்மாள்
- வள்ளியம்மை
- வேலுநாச்சியார்
-
பொருந்தாததை எடுத்து எழுதுக.
- அரசன் வந்தது – திணை வழு
- கபிலன் பேசினாள் – பால் வழு
- குயில்கள் கூவியது – எண் வழு
- கமலா சிரித்தாய் – கால வழு✓
-
The plural form of 'alumna' is
- alumnus
- alumnae✓
- alumnas
- alumne
-
'இனிய நண்ப' – இலக்கணக் குறிப்பு தருக
- குறிப்புப் பெயரெச்சம்✓
- தெரிநிலை பெயரெச்சம்
- எதிர்மறைப் பெயரெச்சம்
- குறிப்பு வினையெச்சம்
-
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று
– இதில் அமைந்து வரும் மோனை.- இணை மோனை
- பொழிப்பு மோனை✓
- ஒரூஉ மோனை
- கூழை மோனை
-
In which place Prime Minister of India inaugurated the country's first Indian Institute of Skills [IIS] on Dec. 20, 2016?டிசம்பர் 20, 2016ல் பிரதம மந்திரி நாட்டின் முதன்முதலாக எந்த இடத்தில் இந்திய திறன் மாநிலயத்தை [IIS] துவக்கி வைத்தார்?
- Ahmedabadஅகமதாபாத்
- Bengaluruபெங்களூரு
- Kanpurகான்பூர்✓
- Varanashiவாரணாசி
-
"Don't give up, though pace seems slow"
What is the figure of speech employed here?- Assonance✓
- Allusion
- Apostrophe
- Anaphora
-
'தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு' – இக்கடிதப் பகுதி யாருடையது?
- திரு.வி. கலியாண சுந்தரனார்
- மு. வரதராசனார்✓
- பேரறிஞர் அண்ணா
- ஜவஹர்லால் நேரு
-
"Why do you swear by your ancestors, Uncle Kesavan?"
Here 'you' refers to- Kuttichovan
- Uncle Kesavan✓
- Outhakkutty
- Kesavan's Wife
-
Whose words are these?
"I too possess a body and mind, a heart and soul – just like you".- Kalpana Chawla
- Hughie
- Gaia✓
- Saralabehn
-
'அரியவற்றுள்' – இச்சொல்லை அசைபிரித்து சரியான விடையை எழுதுக.
- நிரை நேர் நேர்
- நிரை நிரை நேர்✓
- நிரை நேர் நிரை
- நேர் நேர் நிரை
-
Who was the first ruler in the Chola-Chalukya line?சோழ - சாளுக்கிய வழியில் வந்த முதல் அரசன் யார்?
- Raja Raja IIஇரண்டாம் இராஜ ராஜன்
- Kulothunga Iமுதலாம் குலோத்துங்கன்✓
- Vikrama cholaவிக்ரம் சோழன்
- Adhi Rajendranஆதி ராஜேந்திரன்
-
The probability that a leap year will have 53 Fridays or 53 Saturdays isஒரு லீப் வருடத்தில் 53 வெள்ளிக்கிழமைகள் அல்லது 53 சனிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு காண்க
- ✓
-
A Sonnet is written in a single stanza consisting of ———— lines.
- 12
- 14✓
- 16
- 18
-
உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர். உன் உயர்வை விட, நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர். உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும் போது உன் நலம், உயர்வு, மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு - இக்கூற்று யாருடைய கடிதப் பகுதி?
- பேரறிஞர் அண்ணா
- அன்னை இந்திராகாந்தி
- மு. வரதராசனார்✓
- திரு.வி.க.
-
Which is wrongly matched?தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்?
- Indo – European Family – Aryaஇந்திய ஐரோப்பிய குடும்பம் – ஆர்யா
- Austric Family – Nishadaஆஸ்டிரிக் குடும்பம் – நிசாடா
- Dravidian Family – Dravidianதிராவிட குடும்பம் – திராவிடா
- Sino – Tibetan Family – Mundaசைனா திபெத்திய குடும்பம் – மூன்டா✓
-
உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக.
புரிசை- வேகம்
- வளம்
- மதில்✓
- மேகம்
-
The MRTP Act, 1969 has been repealed and replaced by the competition Act, 2002 with effect fromவாணிப நடவடிக்கைகளில் முற்றுரிமை தடைச்சட்டம் (MRTP Act), 1969 ஆனது ரத்து செய்யப்பட்டு போட்டிச் சட்டம் 2002க்கு இக்காலத்திலிருந்து நடைமுறைபடுத்தப்பட்டது.
- 20022002
- 20092009✓
- 20132013
- 20162016
-
Total surface area of hollow hemisphere is equal toஉள்ளீடற்ற அரைக் கோளத்தின் மொத்தப் புறப்பரப்பு =
- 2π(R^2 + r^2) sq. units2π(R^2 + r^2) ச. அலகுகள்
- 2π(R^2 - r^2) sq. units2π(R^2 - r^2) ச. அலகுகள்
- π(3R^2 + r^2) sq. unitsπ(3R^2 + r^2) ச. அலகுகள்✓
- π(3R^2 - r^2) sq. unitsπ(3R^2 - r^2) ச. அலகுகள்
-
சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர் யார்?
- உமறுப்புலவர்
- கம்பர்✓
- நாமக்கல் கவிஞர்
- பாரதியார்
-
'I haven't answered your questions, ————?'
Use suitable question tag in the blank.- haven't I?
- have you?
- have I?✓
- has I?
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →