Group 4 / VAO · 2025குரூப் 4 / VAO · 2025
TNPSC Group 4 / VAO 2025 — question paper with answers — page 4 of 8TNPSC குரூப் 4 / VAO 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2025 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
Which of the following statements are true?சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்க.
- 1. Congress boycotted the election which was held in 1923 in Chennai.
- 2. Swaraj Party won 11 seats.
- 3. Justice Party formed Ministry in Chennai.
- 4. Kamaraj led the Non-Co-operation movement in Chennai.
- 1. காங்கிரஸ் கட்சி, 1923ல் சென்னையில் நடந்த தேர்தலை புறக்கணித்தது.
- 2. சுயராஜ்ய கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றது.
- 3. சென்னையில் நீதிகட்சி அமைச்சரவை அமைத்தது.
- 4. காமராஜர் சென்னையில் ஒத்துழையாமை இயக்கத்தினை வழிநடத்தினார்.
- (1), (4) are correct(1), (4) சரியானது
- (1), (2) are correct(1), (2) சரியானது
- (1), (3) are correct(1), (3) சரியானது
- (1), (2), (3) are correct(1), (2), (3) சரியானது✓
-
Arrange in chronological order on Inter-State councilமாநிலங்களுக்கிடையேயான குழுக்களை காலவரிசைப்படி ஒழுங்குபடுத்தவும்.
- 1. Punchhi Commission
- 2. Rajamannar Commission
- 3. Sarkaria Commission
- 4. Venkatachaliah Commission
- 1. புன்ச்சி குழு
- 2. இராஜமன்னார் குழு
- 3. சர்க்காரியா குழு
- 4. வெங்கட செல்லையா குழு
- (3), (4), (2), (1)(3), (4), (2), (1)
- (2), (1), (4), (3)(2), (1), (4), (3)
- (2), (4), (3), (1)(2), (4), (3), (1)
- (2), (3), (4), (1)(2), (3), (4), (1)✓
-
Which of the following is incorrectly paired?பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதுக.
- 1. MFAL – Marginal Farmers and Agricultural Labourer Development Agency
- 2. DPAP – Drought Prone Area Programme
- 3. DDP – District Development Programme
- 4. HDA – Hills Development Agencies
- 1. MFAL – இறுதிநிலை விவசாயி மற்றும் விவசாயக் கூலி தொழிலாளி முன்னேற்றத் திட்டம்
- 2. DPAP – வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான திட்டம்
- 3. DDP – மாவட்ட வளர்ச்சித் திட்டம்
- 4. HDA – மலைப் பகுதிக்கான முன்னேற்றத் திட்டம்
- (1) and (2)(1) மற்றும் (2)
- (1) and (3)(1) மற்றும் (3)
- (3) and (4)(3) மற்றும் (4)✓
- (2) and (3)(2) மற்றும் (3)
-
Match the following:கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
(a) Karaikkal Ammaiyar 1. Thiruvantadi (b) Andal 2. Kachhikalambagam (c) Aranganadha Mudaliyar 3. Pavaippattu (d) Seraman Perumal Nayanar 4. Moothathiruppathigangal (a) காரைக்கால் அம்மையார் 1. திருவந்தாதி (b) ஆண்டாள் 2. கச்சிக்கலம்பகம் (c) அரங்கநாத முதலியார் 3. பாவைப்பாட்டு (d) சேரமான் பெருமாள் நாயனார் 4. மூத்ததிருப்பதிகங்கள் - (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Assertion [A] : The Pallavas constructed the Cave temples without brick, wood, metal and sudhai.கூற்று [A] : பல்லவர்கள், மரம், சுதை, உலோகம், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்கள் இன்றிக் குடைவரைக் கோவில்களை உருவாக்கினர்.
Reason [R] : The stones kept one upon another and not bound with plaster is known as "Katraligal".
காரணம் [R] : கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்குக் "கற்றளிகள்" என்று பெயர்.
- [A] true, but [R] false[A] சரி ஆனால் [R] தவறு
- [A] false but [R] true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true[A] மற்றும் [R] இரண்டும் சரி✓
- Both [A] and [R] are false[A] மற்றும் [R] இரண்டும் தவறு
-
Consider the following statements and Identify the wrong answersகீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு தவறான விடையை கண்டறி.
- 1. On 1st September 1798 Major Bannerman served an ultimatum directing Kattabomman to see him at Palayamkottai.
- 2. Kattabomman's Fort 500 feet long and 300 feet broad, was constructed entirely of Mud.
- 3. On September 16, 1799 Veera Pandiya Kattabomman was tried before an assembly of Palayakkarars at Kayatar.
- 4. On 1st June, 1799 Kattabomman, attended by 500 men, proceeded to Sivagangai.
- 1. 1798 செப்டம்பர், 1 அன்று மேஜர் பானர்மேன் தன்னைக் கட்டபொம்மன் பாளையங்கோட்டையில் சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுவித்தார்.
- 2. கட்டபொம்மனின் கோட்டை 500 அடி நீளத்திலும் 300 அடி அகலத்திலும் முழுவதும் மண்ணினால் கட்டப்பட்டிருந்தது.
- 3. 1799 செப்டம்பர் 16 அன்று பானர்மேன் கட்டபொம்மனை கயத்தாறு என்னுமிடத்தில் பாளையக்காரர்கள் கூடியிருந்த அவையில் விசாரணை செய்தார்.
- 4. 1799 ஜுன் 1 அன்று கட்டபொம்மன் 500 ஆட்களுடன் சிவகங்கை சென்றார்.
- (1) is wrong(1) மட்டும் தவறு
- (2) is wrong(2) மட்டும் தவறு
- (1) and (3) are wrong(1) மற்றும் (3) மட்டும் தவறு✓
- (2) and (4) are wrong(2) மற்றும் (4) மட்டும் தவறு
-
கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக – Veteran
- சோம்பல் உடையவர்
- திறனாளர்✓
- காலம் கடத்துபவர்
- முன்கோபி
-
‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்று அழைக்கப்படும் குற்றாலம் நவீன வசதிகளுடன் ரூ. 15.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். பெயரைச் சொல்லும்போதே உற்சாகம் பிறக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகள் நிறைந்த பகுதி குற்றாலம். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்று அழைக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குற்றாலத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகள் ஏற்படுத்த ரூ. 15.00 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்றழைக்கப்படும் அருவியைக் கண்டறிக.- ஆகாயகங்கை அருவி
- கேத்ரின் அருவி
- சுருளி அருவி
- குற்றால அருவி✓
-
Which of the following statements are true about the Indus Civilisation?சிந்து நாகரிகம் குறித்து பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
- (i) In the 1920s Martimer Wheeler excavated the Harappan sites.
- (ii) The longest text has about twenty six signs.
- (iii) The term "Meluhha" in the Prakrit inscriptions refers to the Indus region.
- (iv) The "Priest King" of steatite was discovered in Mohenjo-Daro.
- (i) 1920களில் மார்டிமர் வீலர் ஹரப்பா பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தினார்.
- (ii) மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத்தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது.
- (iii) பிராகிருத கல்வெட்டுகளில் "மெலுகா" என்ற சொல் சிந்து பகுதியைக் குறிக்கிறது.
- (iv) ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த "மதகுரு அரசன்" மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டது.
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்✓
-
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் :
பாடறிந்து ஒழுகுதல் பண்பு எனப்படுவது.- பண்பு எனப்படுவது ஒழுகுதல் பாடறிந்து
- பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்✓
- பாடறிந்து பண்பு எனப்படுவது ஒழுகுதல்
- ஒழுகுதல் எனப்படுவது பண்பு பாடறிந்து
-
பெயரெச்சங்களின் வகை அறிந்து பொருத்துக :
(a) நிகழ்காலப் பெயரெச்சம் 1. இல்லாத பொருள் (b) உடன்பாட்டுப் பெயரெச்சம் 2. அறிந்த பையன் (c) குறிப்புப் பெயரெச்சம் 3. ஓடுகிற குதிரை (d) ஈறுகெடாத பெயரெச்சம் 4. அறியாத குழந்தை - (a)-3 (b)-2 (c)-4 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
டி.கே. சிதம்பரநாதருடன் தொடர்பில்லாதது எது?
- 1. தமிழ் எழுத்தாளர்
- 2. திறனாய்வாளர்
- 3. வழக்கறிஞர்
- 4. பேராசிரியர்
- (1) மட்டும்
- (2) மட்டும்
- (3) மட்டும்
- (4) மட்டும்✓
-
திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை – தமது தமிழகராதியின் பின் இணைப்பில், தமிழ் மொழியில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் கூறியுள்ளவாறு பொருத்துக :
(a) போர்ச்சுக்கீசிய மொழி 1. 34 (b) தெலுங்கு மொழி 2. 486 (c) அரபு, பாரசீக, இந்துஸ்தானி 3. 06 (d) ஆங்கில மொழி 4. 411 - (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
பிழை திருத்துக :
கூற்று : ஒரு அணில் மரத்தில் ஏறியது.
காரணம் : உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னர் "ஓர்" பயன்படுத்த வேண்டும்.
- கூற்று – சரி; காரணம் – தவறு
- கூற்று – தவறு; காரணம் – சரி✓
- காரணம், கூற்று – இரண்டும் சரி
- கூற்று, காரணம் – இரண்டும் தவறு
-
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி – இவற்றை அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
- அம்புலி, காப்பு, சப்பாணி, தால், செங்கீரை, முத்தம், வருகை
- அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, முத்தம், தால், வருகை
- அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம், வருகை✓
- அம்புலி, காப்பு, செங்கீரை, சப்பாணி, தால், முத்தம், வருகை
-
The correct statements on the Directive principles of state policy areஅரசு வழிகாட்டும் நெறிமுறைகள் மீதான சரியான கூற்றானது.
- (i) The Directive principles of the state policy are provided in Article 36 to 51 of the constitution.
- (ii) The framers of the constitution borrowed this idea from the Spanish constitution.
- (iii) The Directive principles form the soul of the constitution.
- (i) அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் உறுப்பு 36 முதல் 51 வரை அரசமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
- (ii) அரசமைப்பை உருவாக்கியவர்கள் இந்த சிந்தனையை ஸ்பானிஷ் அரசமைப்பிடம் பெற்றனர்.
- (iii) அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் என்பது அரசமைப்பின் ஆன்மாவாகும்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
பிழையற்ற நிகழ்காலத் தொடரைக் கண்டறிக.
- கண்ணன் நேற்று வருவான்
- அன்பு நாளை வந்தான்
- கவின்மொழி வருவாள்
- பூமி சுழல்கிறது✓
-
"வை" என்னும் வேர்ச்சொல்லின் ஏவல் வினைமுற்றினைக் கண்டறிக.
- வைத்த
- வைத்து
- வைத்தது
- வைத்தாள்✓
-
If a : b = 3 : 7 and b : c = 7 : 6, then Find the ratio between c and aa : b = 3 : 7 மற்றும் b : c = 7 : 6 எனில் c மற்றும் a இவற்றின் விகிதம் காண்க.
- 1 : 21 : 2
- 3 : 63 : 6
- 6 : 76 : 7
- 2 : 12 : 1✓
-
“Irrigation Technology” – என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லறிக.
- தகவல் தொழில்நுட்பம்
- சூழலியல் தொழில்நுட்பம்
- நீர்ப்பாசனத் தொழில்நுட்பம்✓
- வெப்ப மண்டலத் தொழில்நுட்பம்
-
.......... .......... உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை நாமே!
இப்பாடல் வரியில் உள்ள எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.- மடவம் × மடந்தை
- உரவோர் ஆயின் × உரவோர் ஆக
- உரவோர் × மடந்தை
- உரவோர் × மடவம்✓
-
Match correctly the Excavated places with their corresponding Districts.பின்வருவனவற்றுள் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஊர்களை அவ்வூர் அமைந்துள்ள மாவட்டத்துடன் பொருத்திக் காட்டுக.
(a) Azhagankulam 1. Sivagangai (b) Vasavasamudram 2. Erode (c) Kodumanal 3. Kanchipuram (d) Keezhadi 4. Ramanathapuram (a) அழகன்குளம் 1. சிவகங்கை (b) வசவசமுத்திரம் 2. ஈரோடு (c) கொடுமணல் 3. காஞ்சிபுரம் (d) கீழடி 4. இராமநாதபுரம் - (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
-
பொருத்துக :
(a) Pre-censorship 1. உடைமை (b) Possession 2. முன் தணிக்கை (c) Prescription 3. முனைமம் (d) Premium 4. நீடனுபோகம் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Which of the following statements are true about Velu Nachiyar?கீழ்க்கண்ட கூற்றுகளில் வேலுநாச்சியார் பற்றி எது/எவை சரியானவை?
- (i) Velu Nachiyar was the daughter of Chellamuthu Sethupathi, King of Sivagangai.
- (ii) Velu Nachiyar's husband was assassinated by the Nawab Army and to attack the Nawab and British. She joined with Gopal Naicker and Hyder Ali.
- (iii) In 1790, she died due to illness.
- (i) வேலுநாச்சியார் சிவகங்கை அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார்.
- (ii) வேலுநாச்சியாரின் கணவர் நவாபின் படைகளால் கொல்லப்பட்டதால் ஆங்கிலேயரைத் தாக்கும் நோக்கத்துடன் கோபால் நாயக்கர், ஹைதர் அலி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார்.
- (iii) வேலுநாச்சியார் நோயுற்று 1790 -இல் இறந்தார்.
- (ii) only(ii) மட்டும்✓
- (i) and (iii)(i) மற்றும் (iii)
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
-
"Manaththodu vaiymai mozhiyin thavaththodu
Thaananj Seiyvaarin Thalai".
Statement 1 : Those who speak the TRUTH are always more superior than those who practice charity or penance.
Statement 2 : Those who practice charity and penance are far better than who speak the TRUTH."மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை".
கூற்று 1 : வாய்மை பேசுபவர்கள் தானம், தவம் செய்பவர்களை விட சிறந்தவர்கள்.
கூற்று 2 : வாய்மையே பேசினாலும் தானம், தவம் செய்பவரே சிறந்தவர்.- Statement 1 – Correctகூற்று 1 – சரி✓
- Statement 2 – Correctகூற்று 2 – சரி
- Statement 1 and 2 – Correctகூற்று 1, 2 – சரி
- Statement 1 and 2 – Incorrectகூற்று 1, 2 – தவறு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →