Group 4 / VAO · 2019குரூப் 4 / VAO · 2019
TNPSC Group 4 / VAO 2019 — question paper with answers — page 3 of 8TNPSC குரூப் 4 / VAO 2019 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2019 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2019 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2019exam yearதேர்வு ஆண்டு
-
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
– இவ்வடிகளில் கைத்தொன்று – பொருள் யாது?- படை கவசம்
- படை கருவிகள்
- கைப்பொருள்✓
- வலிமையான ஆயுதம்
-
பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்
- மறைமலையடிகள்
- உ.வே. சாமிநாத ஐயர்
- வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்✓
- வையாபுரிப்பிள்ளை
-
அகர வரிசைப்படுத்துக
- மிளகு, மருங்கை, முசிறி, மூதூர், மேற்குமலை
- முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை, மருங்கை
- மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை✓
- மருங்கை, முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை
-
தாழ்பூந்துறை – என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக
- ஏவல் வினைமுற்று
- உரிச்சொல் தொடர்
- பண்புத்தொகை
- வினைத்தொகை✓
-
Assertion (A) : Blood samples are usually taken from the veins rather than arteryகூற்று (A) : இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விடச் சிரைகளே சிறந்தவை
Reason (R) : Low Pressure in the veins
காரணம் (R) : சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்
- Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்✓
- (A) is true, (R) is false(A) சரி ஆனால் (R) தவறு
- (A) is false, (R) is true(A) தவறு ஆனால் (R) சரி
- Both (A) and (R) are true and (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
-
India's central meridian passes throughஇந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை ———— வழியாக செல்லுகிறது.
- Ahmedabadஅகமதாபாத்
- Mirzapurமிர்சாபூர்✓
- Greenwichகீரின்விச்
- Gujaratகுஜராத்
-
பொருத்துக
வேற்றுமை — உருபு(a) நான்காம் வேற்றுமை 1. இன் (b) ஐந்தாம் வேற்றுமை 2. அது (c) ஆறாம் வேற்றுமை 3. கண் (d) ஏழாம் வேற்றுமை 4. கு - (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
நாமக்கல் கவிஞருக்கு "பத்மபூஷண்" விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?
- நடுவணரசு✓
- மாநில அரசு
- ஆங்கில அரசு
- பிரெஞ்சு அரசு
-
பாகற்காய் – பிரித்தெழுதுக
- பாகு + அல் + காய்✓
- பாகு + அற்காய்
- பாகற் + காய்
- பாகு + கல் + காய்
-
குறுந்தொகை நூலின் 'பா' – வகை யாது?
- கலிப்பா
- வஞ்சிப்பா
- வெண்பா
- அகவற்பா✓
-
தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்
- ஜி.யு. போப்
- வீரமாமுனிவர்✓
- H.A. கிருஷ்ணப்பிள்ளை
- ரா.பி. சேதுபிள்ளை
-
The ratios of the respective heights and the respective radii of two cylinders are 1 : 2 and 2 : 1 respectively. Then their respective volumes are in the ratio.இரண்டு உருளைகளின் உயரங்கள் முறையே 1 : 2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2 : 1 ஆகிய விகிதங்களிலிருப்பின், அவற்றின் கன அளவுகளின் விகிதம்
- 4 : 14 : 1
- 1 : 41 : 4
- 2 : 12 : 1✓
- 1 : 21 : 2
-
திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
- சி.வை. தாமோதரம்
- வ. சுப. மாணிக்கம்
- தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்✓
- சீனி. வேங்கடசாமி
-
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
- எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்
- எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது
- எழிலரசி சிலப்பதிகாரம் கல்லாள்
- எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்✓
-
அதியமானின் தூதராக ஒளவை சென்றதைக் கூறும் நூல் எது?
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- புறநானூறு✓
- ஆத்திச்சூடி
-
The Androgen Binding protein is produced byஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை
- Hypothalamusஹைபோதலாமஸ்
- Leydig cellsலீடிக்செல்கள்
- Testosteroneடெஸ்டோஸ்டீரோன்
- Sertoli cellsசெர்டோலி செல்கள்✓
-
‘இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது’ என்றவர் யார்?
- மாக்சு முல்லர்
- கால்டுவெல்
- கெல்லட்
- எமினோ✓
-
Who was called as 'the father of Modern Currency' during the Mughal period?முகலாயர் காலத்தில் 'நவீன நாணய முறையின் தந்தை' என அழைக்கப்பட்டவர் யார்?
- Baburபாபர்
- Akbarஅக்பர்
- Shershahஷெர்ஷா✓
- Shah Jahanஷாஜஹான்
-
In the year 2017-18 The Per Capita Income (GSDP) of Tamil Nadu was2017–18 ல் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் (GSDP) எவ்வளவு?
- $ 1670$ 1670
- $ 2200$ 2200✓
- $ 1443$ 1443
- $ 2175$ 2175
-
Which article of the Indian Constitution talks about 'Taxes levied and collected by the Union but assigned to the States'?'மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள்' பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து என் யாது?
- Art. 201சரத்து 201
- Art. 269சரத்து 269✓
- Art. 272சரத்து 272
- Art. 268சரத்து 268
-
இளங்கோவடிகள், “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” என்று யாரைப் பாராட்டியுள்ளார்?
- நாதகுத்தனார்
- தோலா மொழித்தேவர்
- திருத்தக்க தேவர்
- சீத்தலைச் சாத்தனார்✓
-
During 1857, the peasants had to pay heavy taxes in the form of1857 ல் குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி
- Land taxநில வரி✓
- Customs dutyசுங்க வரி
- Revenue taxவருமான வரி
- Service taxசேவை வரி
-
தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்?
- இராணி மங்கம்மாள்✓
- ஜான்சி ராணி
- தில்லையாடி வள்ளியம்மை
- வேலுநாச்சியார்
-
பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க :
- கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்
- கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி✓
- சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்
- கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
-
A group of 100 candidates have their average height 163.8 cm with coefficient of variation 3.2. What is the standard deviation of their heights?ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர், அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8 செ.மீ மற்றும் மாறுபாட்டுக்கெழு 3.2 எனில், அவர்களுடைய உயரங்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.
- 3.233.23
- 4.914.91
- 5.245.24✓
- 6.386.38
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →