Tamilதமிழ்
Author & Work — 236 previous-year questions — page 6 of 10
Every Author & Work question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 236questionsவினாக்கள்
-
“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர்– யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்✓
- சரதா
- கவிமணி
-
"தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களுடையே வளர வேண்டும்." - என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?
- தமிழ்த் தென்றல் திரு.வி.க
- பெரியார்✓
- பாவேந்தர் பாரதிதாசன்
- தாரா பாரதி
-
"உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்" எனக் கூறியவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- வில்லிப்புத்தூரார்
- கம்பர்✓
-
சரியான விடையைத் தெரிவு செய்க
'கிரித்தவக் கம்பர்' எனப் புகழப் பெறுபவர்- வீரமாமுனிவர்
- ஜி.யு. போப்
- எல்லீஸ்
- ஜென்றி ஆஸ்பர்ட்டே கிருட்டிணனார்✓
-
பட்டியல் I-ல் உள்ள தமிழ் ஆளுமைகளின் புனைபெயர்களை, பட்டியல் II-ல் உள்ள அவர்களது இயற்பெயர்களோடு பொருத்துக. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
புனைபெயர்பட்டியல் I பட்டியல் II (a) புதுமைப்பித்தன் 1. செகதீசன் (b) ஈரோடு. தமிழன்பன் 2. எத்திராஜ் (c) வாணிதாசன் 3. முத்தையா (d) கண்ணதாசன் 4. சொ. விருத்தாசலம் இயற்பெயர்
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
கீழ்க்கண்ட கூற்றுக்களுள் சரியானவற்றைத் தேர்வு செய்க
- 1. தாயுமானவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு
- 2. இவர் காலம் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
- 3. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்பது இவர் எழுதிய நூல்
- 4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சேதுபதியிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்
- 1, 4 சரி
- 2, 3 சரி✓
- 2, 4 சரி
- 1, 3 சரி
-
பொருத்துக :
சிறுகதை ஆசிரியர்களையும் அவர்கள் எழுதிய சிறுகதைகளையும் பொருத்துக(a) கமலாலயன் 1. ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் (b) பி.ச. குப்புசாமி 2. கலைக்க முடியாத ஓப்பனை (c) சு.சமுத்திரம் 3. உனக்குப் படிக்கத் தெரியாது (d) வண்ணதாசன் 4. காகித உறவு - (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
குலசேகர ஆழ்வார் வட மொழியில் எழுதிய நூல் எது?
- முகுந்தமாலை✓
- முதலாயிரம்
- திருவியற்பா
- பெரியதிருமொழி
-
வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்✓
- தேவநேய பாவாணர்
- பரிதிமாற்கலைஞர்
- இளங்கோவடிகள்
-
கூடைக முத்துப் புலவரின் மாணவர் யார்?
- அப்துல் காதர்
- உமறுப்புலவர்✓
- அகமது மரைக்காயர்
- ஆயுக்கர்
-
'இராசராச சோழனுலா' வைப் பாடியவர்
- ஒட்டக்கூத்தர்✓
- புகழேந்திப் புலவர்
- காளமேகப் புலவர்
- குமரகுருபரர்
-
"எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு" – என்று கூறிய தமிழறிஞர்
- மறைமலையடிகள்
- தேவநேயப்பாவாணர்✓
- ம.பொ. சிவஞானம்
- பரிதிமாற்கலைஞர்
-
தமிழார்வத்தின் காரணமாகத் தம் பெயரை 'பரிதிமாற்கலைஞர்' என மாற்றி அமைத்துக் கொண்டவர்
- மறைமலையடிகள்
- சூரியநாராயண சாஸ்திரி✓
- ரா. இராகவையங்கார்
- சிங்கார வேலு முதலியார்
-
'திருவிருத்தம்' என்ற நூலின் ஆசிரியர்
- நம்மாழ்வார்✓
- திருப்பாணாழ்வார்
- மதுரகவியாழ்வார்
- பேயாழ்வார்
-
"ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு" - என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்?
- வ. உ. சிதம்பரம்
- டி. கே. சிதம்பரம்✓
- சிதம்பர சுவாமி
- சிதம்பர நாதன்
-
குமரகுருபரரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்
- மதுரைக் கலம்பகம்
- நந்திக் கலம்பகம்✓
- கந்தர் கலிவெண்பா
- நீதிநெறி விளக்கம்
-
விடைத்தேர்க: வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
- முதுமொழி மாலை
- செந்தமிழ் இலக்கணம்
- கொடுந்தமிழ் இலக்கணம்
- தொன்னூல் விளக்கம்✓
-
கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க.
- தினங்களை கொண்டாடுவதை விடுங்கள் – கவிக்கோ✓
- மண்புழுவல்ல மானிடனே – பாரதி
- கன்று குரல் கேட்ட பசு – தாராபாரதி
- தண்ணீர் போல பணத்தை செலவு செய்தல் – ஆலந்தூரார்
-
'மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்' என்ற ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?
- க.ப. சந்தோஷம்
- மறைமலை அடிகள்✓
- வ.உ.சி
- செம்மல் கேசவராய முதலியார்
-
'மருமக்கள் வழி மான்மியம்' என்ற நூலின் ஆசிரியர் யார்?
- திரு. வி. க
- கவிமணி✓
- இரசிகமணி
- நாமக்கல் கவிஞர்
-
ஜெயகாந்தன் இயற்றாத கிறுவை எது?
- குருதீடம்
- அறம்
- யுகசந்தி
- புதிய வார்ப்புகள்✓
-
சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?
- பல்கலைக்கழகம்✓
- அரசவைக் கவிஞர் பணி
- அறக்கட்டளை
- பேராசிரியர் பணி
-
சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?
- உமறுப்புலவர்✓
- சீதக்காதி
- அபுல்காசிம்
- திருநாவுக்கரசர்
-
பொருத்துக :
நூல்(a) பாண்டியன் பரிசு 1. பாரதியார் (b) குயில் பாட்டு 2. நாமக்கல் கவிஞர் (c) ஆசிய ஜோதி 3. பாரதிதாசன் (d) சங்கொலி 4. கவிமணி ஆசிரியர்
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
'மண நூல்' இந்நூலின் ஆசிரியர் யார்?
- இளங்கோவடிகள்
- சீத்தலைச் சாத்தனார்
- திருத்தக்க தேவர்✓
- திருவள்ளுவர்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →