Tamilதமிழ்
Author & Work — 236 previous-year questions — page 8 of 10
Every Author & Work question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 236questionsவினாக்கள்
-
கீழே காண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
- தமிழகத்தின் 'வேர்ட்ஸ் வொர்த்' என்று புகழப்பட்டவர் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்த வாணிதாசன்
- 'திரைக்கவித்திலகம் அ. மருதகாசி பாடல்கள்' என்னும் தலைப்பில் அ. மருதகாசியின் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது
- நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அநுபூதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களைக் குமரகுருபரர் பாடினார்✓
- காரைமுத்துப்புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன், ஆரோக்கியநாதன், கமகப்பிரியா எனப் புனைபெயர்கள் கண்ணதாசனுக்கு உண்டு
-
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?
- கபிலர்
- மூவாதியார்
- நல்லாதனார்
- கணிமேதாவியார்✓
-
தமிழ் மொழியில் நவீனக்கதை இலக்கியத்தினை தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர்
- பி.எஸ். ராமையா
- கு.ப. ராஜகோபாலன்
- கல்கி
- புதுமைப்பித்தன்✓
-
சீரஞ்சை பட்டியலில் பொருந்தாத நாடகம்
- சந்திரோகயம்
- ஓர் இரவு
- தூக்குமேளை✓
- வேலைக்காரி
-
முத்துராமலிங்கத்தேவரை 'தேசியம் காத்த செம்மல்' என்று பாராட்டியவர் யார்?
- ப. ஜீவானந்தம்
- திரு.வி. கலியாணசுந்தரனார்✓
- காமராசர்
- அறிஞர். அண்ணா
-
'துரை மாணிக்கம்' என்பது இவரின் இயற்பெயர்
- கவிஞர் சுரதா
- கவிஞர் மீரான்
- பாரதிதாசன்
- பெருஞ்சித்திரனார்✓
-
'வேலி' என்னும் சிறுகதையின் ஆசிரியர் யார்?
- இந்துமதி
- சிவசங்கரி
- இராஜம் கிருஷ்ணன்✓
- ஜெயகாந்தன்
-
பொருத்துக :
(a) முல்லைப்பாட்டு 1. நறுந்தொகை (b) பட்டினப்பாலை 2. வேளாண்வேதம் (c) நாலடியார் 3. வஞ்சி நெடும்பாட்டு (d) வெற்றிவேற்கை 4. நெஞ்சாற்றுப்படை - (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
“தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் திகழ்கிறார்” – என்று புகழ்ந்துரைத்தவரைக் கண்டறிக.
- தந்தை பெரியார்
- அறிஞர் அண்ணா✓
- ம.பொ. சிவஞானம்
- ப. ஜீவானந்தம்
-
பொருத்துக :
நூல்(a) சிறுபாணாற்றுப்படை 1. முடத்தாமக்கண்ணியார் (b) திருமுருகாற்றுப்படை 2. நல்லூர் நத்தத்தனார் (c) பொருநராற்றுப்படை 3. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (d) பெரும்பாணாற்றுப்படை 4. நக்கீரர் ஆசிரியர்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர்
- மெய்யப்பர்
- உ.வே. சாமிநாதனார்✓
- இலக்குவனார்
- மீனாட்சி சுந்தரனார்
-
திருக்கோட்டியூர் நம்பியால் 'எம்பெருமானார்' என்று அழைக்கப்பட்டவர் யார்?
- நாதமுனிகள்
- இராமானுசர்✓
- திருவரங்கத்தமுதனார்
- மணவாள மாமுனிகள்
-
'காவடிச் சிந்தின் தந்தை' என்று அழைக்கப்பட்டவர்
- அருணகிரியார்
- அண்ணாமலையார்✓
- சந்தனார்
- பாரதியார்
-
சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?
- பேராசிரியர்
- அடியார்க்கு நல்லார்
- நச்சினார்க்கினியர்✓
- ந.மு. வேங்கடசாமி
-
"உணவு, உடை, அடிப்படைத் தேவை – அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகச்சாலைக்குத் தரப்பட வேண்டும்" என்று கூறியவர்
- ஆபிரஹாம் லிங்கன்
- அறிஞர் அண்ணா✓
- விவேகானந்தர்
- கதே
-
‘நான்மணிக்கடிகை’ என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் இயற்பெயரைச் சுட்டுக.
- நாயனார்
- நல்லந்துவனார்
- நாகனார்✓
- சேந்தனார்
-
சரியான இணையைக் கண்டறிக :
- 1. தாராபாரதி – ஆசியஜோதி
- 2. முடியரசன் – வீரகாவியம்
- 3. கவிமணி – இதய ஒலி
- 4. இரசிகமணி – விரல் நுனி வெளிச்சங்கள்
- (2) - சரி✓
- (1) - சரி
- (4) - சரி
- (3) - சரி
-
'வாலெங்கே? நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே? நாலு ...............' எனத் தொடங்கும் இரட்டுறமொழிதல் பாடலின் ஆசிரியர் யார்?
- சொக்கநாதர் பலபட்டடையார்
- அழகிய சொக்கநாதர்
- கவி காளமேகம்✓
- குமரேசர்
-
கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது?
- ஆயிரந்தீவு அங்கயற்கண்ணி
- இராஜ தண்டனை
- மாங்கனி
- கொய்யாக்கனி✓
-
பொருந்தாத விடையைக் குறிப்பிடுக :
- மனுமுறை கண்ட வாசகம்
- திருப்புகழ்✓
- திருவருட்பா
- ஜீவகாருண்ய ஒழுக்கம்
-
திரு. வி. கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?
- யான் கண்ட இலங்கை
- எனது இலங்கைச் செலவு✓
- யான் கண்ட ஜப்பான்
- உலகம் சுற்றிய தமிழன்
-
'வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்' என எடுத்துரைத்தவர்
- கண்ணதாசன்
- பாரதியார்
- பாரதிதாசன்
- பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்✓
-
கீழுள்ள கம்பரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?
- எரெழுபது
- அபிராமி அந்தாதி✓
- சடகோபர் அந்தாதி
- திருக்கை வழக்கம்
-
பட்டியல் ஒன்றில் உள்ளதைப் பட்டியல் இரண்டுடன் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
பட்டியல் ஒன்று(a) தமிழ்நாடும், தம்மாழ்வாரும் 1. கவிமணி தேசிக விநாயகனார் (b) தேன்மழை 2. சயங்கொண்டார் (c) குழந்தைச் செல்வம் 3. திரு. வி. க. (d) இசையாபிரம் 4. கரதா பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
மாணிக்கவாசகர் கட்டிய கோவில் எங்குள்ளது?
- புதுக்கோட்டை
- திருப்பெருந்துறை✓
- திருவெண்ணெய் நல்லூர்
- பெரியகுளம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →