Tamilதமிழ்
Vocabulary — 276 previous-year questions — page 9 of 12
Every Vocabulary question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 276questionsவினாக்கள்
-
'கடுக்காய்க் கொடுத்தல்' என்னும் மரபுத்தொடரின் சரியான பொருளைக் கண்டறிக.
- மாற்றிப் பேசுதல்
- ஏமாற்றுதல்✓
- குறுக்கிடுதல்
- பிடிவாதம் காட்டுதல்
-
வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.
- தென்னை போன்ற தோள்
- பளிங்கு போன்ற தோள்
- மூங்கில் போன்ற தோள்✓
- வாழை போன்ற தோள்
-
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்.
சூல், சூழ், சூள்- கருப்பம், சுற்று, சபதம்✓
- சபதம், சுவர், தானியம்
- ஆலோசனை, ஆணை, வாயில்
- ஆணை, முற்றுகையிடு, சருமம்
-
'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி'
என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்- நாலாயிர திவ்வியப்பிரபந்தம், இருபா இருபஃது
- இன்னா நாற்பது, இனியவை நாற்பது
- நாலடியார், திருக்குறள்✓
- அகநானூறு, புறநானூறு
-
சரியான இணையைத் தேர்வு செய்க.
- (a) துவரை — தாமரை மலர்
- (b) மரை — பவளம்
- (c) விசும்பு — வானம்
- (d) மதியம் — நிலவு
- (a) மற்றும் (b) சரி
- (b) மற்றும் (c) சரி
- (c) மற்றும் (d) சரி✓
- (d) மற்றும் (a) சரி
-
பொருத்துக :
(a) மாணி 1. பொன் (b) மானி 2. குள்ளன் (c) கணகம் 3. படை (d) கனகம் 4. மாமன் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
பொருத்துக :
(a) சிங்கம் 1. அகவும் (b) மயில் 2. களைக்கும் (c) புலி 3. முழங்கும் (d) குதிரை 4. உறும் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?
- சே – சோலை
- சோ – சிவப்பு
- கா – மதில்
- மா – விலங்கு✓
-
பொருத்துக :
(a) Abulia 1. சீழ்கட்டி (b) Acomia 2. உடல் வழுக்கை (c) Abscess 3. மன உறுதிக் குறைபாடு (d) Alopecia Universalis 4. தலை வழுக்கை - (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
வணிக மேலாண்மை குறித்த ஆங்கிலச் சொற்களைத் தமிழ்க் கலைச்சொற்களோடு பொருத்துக :
(a) Barter 1. வாராக் கடன் (b) Bargaining 2. பண்டமாற்று (c) Bad debt 3. கைப்பற்றப்பட்ட நிறுவனம் (d) Acquiree 4. பேரம் பேசுதல் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
யானையின் ஒலி மரபைக் கண்டறிக.
- அலப்பும்
- பிளிறும்✓
- எக்காளமிடும்
- கதறும்
-
தொழில்நுட்பச் சொற்களைப் பொருத்துக :
(a) Nautical mile 1. மணல் தோடுவரை (b) Natric horizon 2. நெப்புயூனின் துணைக்கோள் (c) Narbonnaise 3. 1852 மீ (d) Nalad 4. மழை புயற்காற்று - (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்று(a) கோக்கோதை நாடு 1. பறவை இனம் (b) பார்ப்பு 2. சேற்று வயல் (c) புள்ளினம் 3. சேர நாடு (d) அள்ளற் பழனம் 4. குஞ்சு பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று(a) ஏற்றப்பாட்டு 1. ஒருவகை மீன் (b) நாஞரெ 2. நீர் நிலை (c) குறவை 3. நீர் இறைக்கும் போது பாடும் பாட்டு (d) குளம் 4. கொக்கு வகை பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
-
பொருத்துக
ஆங்கிலம்(a) செக் 1. கடவுச் சீட்டு (b) பைல் 2. நுழைவு இசைவு (c) விசா 3. கோப்பு (d) பாஸ்போர்ட் 4. காசோலை தமிழ்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
பொருத்துக :
(a) திருவரங்கம் 1. சிதம்பரம் (b) திருச்சிற்றம்பலம் 2. ஸ்ரீரங்கம் (c) திருமறைக்காடு 3. மீனாட்சி (d) அங்கயற்கண்ணி 4. வேதாரணியம் - (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
'கேண்மை' – இச்சொல்லின் எதிர்ச்சொல்.
- துன்பம்
- பகை✓
- நட்பு
- வலிமை
-
பொருத்துக :
(a) Arete 1. களிமண் பாறை (b) Arenaceous rock 2. கத்திமுனைக் குன்று (c) Argillaceous rock 3. இடையாழ் கிரானைட்டு பாறை (d) Aplite 4. மணற் பாறை - (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
கீழ்க்காணும் கலைச்சொற்களைப் பொருத்துக :
(a) Nanotechnology 1. அறிவாளர் (b) Biotechnology 2. விண்வெளித் தொழில்நுட்பம் (c) Spacetechnology 3. உயிரித் தொழில்நுட்பம் (d) Intellectual 4. மீநுண் தொழில்நுட்பம் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
- அவர்களிருவருக்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது
- அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது
- அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது✓
- அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது
-
பொருத்துக :
(a) விசுப்பு 1. தத்தம் (b) துலை 2. நெடுப்பு (c) கலம் 3. யானை (d) கலிறு 4. வானம் (e) மருப்பு 5. துலாக்கோல் - (a)-4 (b)-5 (c)-2 (d)-3 (e)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4 (e)-5
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1 (e)-5
- (a)-2 (b)-1 (c)-5 (d)-4 (e)-3
-
Proposal எனும் சொல்லிற்கான இணையான சொல்லைத் தருக.
- உண்மை உரு
- பொய் உரு
- கருத்துரு✓
- எண்ண உரு
-
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
Visual Scanner- காட்சிப் பக்கம்
- படப்பிடிப்பு
- கட்புலமேவி✓
- காட்சி உணர்தல்
-
"பாடை மாக்கள்" என அழைக்கப்படுபவர்கள் யாவர்?
- சமயத் தத்துவவாதிகள்
- பல மொழி பேசும் மக்கள்✓
- படை வீரர்கள்
- வணிகர்கள்
-
அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
"தகுதியான் வென்று விடல்"- பெருமை
- பொறுமை✓
- கல்வி
- பண்பு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →