Tamilதமிழ்
Vocabulary — 276 previous-year questions — page 8 of 12
Every Vocabulary question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 276questionsவினாக்கள்
-
உமர்கய்யாம், 'ரூபாயத்' என்ற பெயரில் எழுதிய நூலைக் கவிமணி மொழி பெயர்த்தார். அடிக் கோடிட்ட சொல்லின் பொருளை எழுதுக.
- எட்டடிச் செய்யுள்
- இரண்டடிச் செய்யுள்
- நான்கடிச் செய்யுள்✓
- இவை எல்லாம் தவறானவை
-
'சலவரைச் சாரா விடுதல் இனிதே'
'சலவர்' – என்றச் சொல்லின் ஆங்கிலச்சொல்- Sorrow full person
- Importer
- Violent person
- Deceit full person✓
-
'ஏ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
- தலைவன்
- நெருப்பு
- அரண்
- அம்பு✓
-
ஒரு பொருட் பன்மொழியில் "மீமிசை ஞாயிறு" என்னும் சொற்கள் உணர்த்தும் பொருளைக் கண்டறிக.
- பக்கப்பகுதி
- கீழ்ப்பகுதி
- நடுப்பகுதி
- மேல்பகுதி✓
-
“Assailant” - என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்.
- தாக்குபவர்✓
- முன் மரியாளர்
- உதவியாளர்
- புனைவை நயர்
-
பொருத்துக
(a) மேதி 1. அள்ளம் (b) புள் 2. அலை (c) காசினி 3. எருமை (d) திரை 4. நிலம் - (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
'து' என்னும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?
- ஆறு
- துப்பு
- உண்✓
- துன்பம்
-
‘ஆப்பசைத்தக் குரங்கதனைப் போல’ என்ற உவமைத்தொடர் உணர்த்தும் சரியான பொருளைக் கண்டறிக.
- இன்பம்
- ஏக்கம்
- வேகம்
- வேதனை✓
-
அகரவரிசைப்படி சொற்களை அமைக்க :
- கருஞுலம், களத்துமேடு, கவரிமான், கலம்பூச்சு
- கவரிமான், கருஞுலம், களத்துமேடு, கலம்பூச்சு
- கருஞுலம், கலம்பூச்சு, கவரிமான், களத்துமேடு✓
- கலம்பூச்சு, கவரிமான், கருஞுலம், களத்துமேடு
-
'கொன்று' பொருள் கூறுக?
- மேகம்✓
- போர்
- சுற்றம்
- வானம்
-
அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி
- டு
- கோ✓
- கா
- ஆ
-
மன்னிப்பு - எம்மொழிச் சொல்
- தமிழ்
- தெலுங்கு
- மலையாளம்
- உருது✓
-
புல்வாய், நக்வி, உழவை ஆகியவற்றின் பெண்ணைகைக் குறிக்கும் சொல்லைக் கண்டறிக.
- பிணை✓
- நாகு
- அசகு
- பெட்டை
-
அகரவரிசைப்படி அமைந்த சொற்களைக் கண்டறிக.
- தாய்மொழி, தேன், தமிழ், துறை
- தமிழ், துறை, தாய்மொழி, தேன்
- தமிழ், தாய்மொழி, துறை, தேன்✓
- தேன், துறை, தாய்மொழி, தமிழ்
-
கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
Glacier- வெப்ப ஆறு
- செவுள் இழை
- செவுள் வலை
- பனியாறு✓
-
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக :
பட்டியல் ஒன்று(a) ஓரம் 1. வறுமை (b) வேற்றுமை 2. தீது (c) நன்று 3. மையம் (d) செழுமை 4. ஒற்றுமை பட்டியல் இரண்டு
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
-
ஒரு பொருட் பன்மொழிக்குச் சான்று அல்லாதது எது?
- உயர்ந்தோங்கி
- நடு மையம்
- மீமிசை ஞாயிறு
- மாடு மனை✓
-
'அரிசி' என்னும் தமிழ்ச் சொல் 'ஓரைஸா' என எம்மொழிக்குச் சென்றது?
- கிரேக்கம்✓
- இலத்தீன்
- போர்ச்சுகீசியம்
- வடமொழி
-
"குறிக்கண்ட நோய்க்குக் குழாய் கொடு" இத்தொடரில் 'குழாய்' என்னும் மூலிகை
- கதிர்வேற்பிலை
- குப்பைமேனி
- தூதுவளை
- கற்றாழை✓
-
கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக.
Delegate (டெலிகேட்)- வடிவமைப்பு
- பேராளர்✓
- குழும்பெட்டி
- மரபுத்தகவு
-
கிருஷ்ணகிரி, கோத்தகிரி — இதில் காணப்படும் 'கிரி' எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?
- கல்லிடைக் குறிச்சி
- பாறை
- மலை✓
- கோட்டை
-
பொறியியலில் “Anchorage” – என்னும் ஆங்கிலச் சொல்லிற்குக் கலைச்சொல் தருக.
- நேர்கோட்டு வைப்பு
- ஊன்றுதளை✓
- வெட்டுமுகம்
- நீர்க்குழல்
-
'பரவை' – இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
- மலை
- கடல்✓
- ஆறு
- உயிர்வகை
-
பொருத்துக
I(a) இமயம் 1. சந்தனம் (b) குடகு 2. பவளம் (c) கொற்கை 3. மணிகள் (d) கீழ்க்கடல் 4. முத்து II
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
“வேளைப் பிசகு” – எனும் மரபுத் தொடரின் பொருள் தேர்க.
- நல்ல காலம்
- தீய காலம்✓
- கடந்த காலம்
- வரும் காலம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →