Tamilதமிழ்
Vocabulary — 276 previous-year questions — page 3 of 12
Every Vocabulary question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 276questionsவினாக்கள்
-
உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக.
புரிசை- வேகம்
- வளம்
- மதில்✓
- மேகம்
-
அகர வரிசைப் படி அமைந்துள்ளனவைக் கண்டறிக
- செப்பு, சென்னை, செல்வம், செடி
- செடி, செப்பு, செல்வம், சென்னை✓
- செப்பு, செல்வம், சென்னை, செடி
- செடி, செல்வம், செப்பு, சென்னை
-
வரலாற்றியலில் 'Whitehall' – என்னும் சொல்லிற்கு இணை கண்டறிக.
- வெள்ளை மாளிகை – அமெரிக்கா
- ரஷ்ய – மாளிகை
- வாடிகன் – மாளிகை
- பிரிட்டானிய அரசு அலுவலகம்✓
-
பின்வருவனவற்றுள் அகர வரிசைப்படி எழுதப்பட்ட நயமனிகளை தெரிவு செய்க.
- நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புஷ்பராகம், மரகதம்
- கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்✓
- கோமேதகம், நீலம், புஷ்பராகம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்
- கோமேதகம், நீலம், புஷ்பராகம், பவளம், மரகதம், முத்து, மாணிக்கம், வைரம், வைடூரியம்
-
Fiction என்னும் சொல்லின் தமிழ்ச்சொல்
- வனைவு
- புனைவு✓
- புதுமை
- வளைவு
-
ஓரெழுத்து ஒரு மொழியைப் பொருத்துக :
(a) க 1. உறுதி (b) கா 2. கொள்ளுகை (c) தே 3. பறவை (d) தி 4. தராசு - (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
-
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்று(a) நீள்நெடுங்கண்ணி 1. கட்கநேத்ரி (b) வாள்நெடுங்கண்ணி 2. விசாலாட்சி (c) பழமலைநாதர் 3. சொர்ணபுரீச்சுரர் (d) செம்பொன் பள்ளியார் 4. விருத்தகிரீசுவரர் பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
ஊர்ப் பெயர்களோடு மரூஉ சொற்களைப் பொருத்துக :
(a) தேவகோட்டை 1. கோவை (b) கோவன்புத்தூர் 2. சோணாடு (c) பூந்தமல்லி 3. தேவோட்டை (d) சோழநாடு 4. பூனமல்லி - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
"இறை, செப்பு" என்பன கீழ்க்கண்ட எச்சொல்லுக்கு வழங்கும் வேறுபெயர்கள்
- வினா
- மொழி
- விடை✓
- இறைவன்
-
பொருத்துக :
(a) அணிகம் 1. காமன் (b) அநிகம் 2. சிவிகை (c) அனிகம் 3. படையில் ஓர் அளவு (d) அநங்கு 4. ஊர்தி - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
'கிஇலம்' – இச்சொல்லின் பொருள்.
- முரசம்
- ஊண்றுகோய்
- சோம்பல்
- தலைப்பாகை✓
-
மறு ஆய்வு மனு என்பதை ஆங்கிலத்தில் ——— என்றழைப்பர்.
- Writ Petition
- Habeas Corpus
- Review Petition✓
- Revision Petition
-
'கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல' - என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது?
- இன்பம்
- வருமுன் காத்தல்
- மகிழ்ச்சி
- துன்பம்✓
-
வரிசை ஒன்றுடன், வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் இருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
வரிசை ஒன்று(a) Internet 1. மின் இதழ் (b) Search Engine 2. மின் நூல் (c) E. Journal 3. இணையம் (d) E - Book 4. தேடுபொறி வரிசை இரண்டு
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
பொருத்துக :
(a) தட்டு 1. வேம்பு (b) கழி 2. மூங்கில் (c) கழை 3. சோளம் (d) அடி 4. கரும்பு - (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
தமிழ் இலக்கியத்தில் 'ஆலவாய்' என்னும் பெயர் இவ்வூருக்கும் பொருந்தும்.
- நெல்லை
- திருச்சி
- மதுரை✓
- லளிரிப்பும்பட்டினா
-
நா – ஒரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
- உண்
- புல்
- கொடு
- நாவு✓
-
இரு பொருள் தருக : 'தாரணி'
- சூரியன், உலகம்
- கதிரவன், மதி
- கடல், பூமி
- பூமி, உலகம்✓
-
"குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு" – இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?
- கரிசலாங்கண்ணி
- தூதுவளை
- குப்பைமேனி
- சோற்றுக்கற்றாழை✓
-
இவற்றுள் எது தவறான இணை எதிர்ச்சொல் என்பதைத் தெரிவு செய்க.
- இரவு × பகல்
- அகலாது × போகாது✓
- தண்மை × வெம்மை
- விருப்பு × வெறுப்பு
-
"என்காற் சிலம்பு மணியுடை அரியே"
இவ்வடிகளில் 'மணி' என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.- பவளம்
- முத்து
- மாணிக்கம்✓
- மரகதம்
-
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
- சாவி
- பொத்தான்
- சோப்பு
- பிண்டம்✓
-
"கனலி" என்ற சொல்லைக் குறிக்காத சொல்லைைத் தேர்க.
- சூரியன்
- நெருப்பு
- பன்றி
- கரும்பு✓
-
பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
- கப்பல்
- அம்பி
- ஆழி✓
- திமில்
-
'Presbyoesophagus' எனும் கலைச்சொல்லுக்கு இணையான சொல்லைக் கண்டறிக.
- முதியோரின் கோளா நிலை
- உணவுக்குழல் தளர்ச்சி அடைதல்✓
- வெள்ளெழுத்து முதிர்வு அடைதல்
- மார்சனிக காய்ப்ச்சல்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →