Group 4 / VAO · 2024குரூப் 4 / VAO · 2024
TNPSC Group 4 / VAO 2024 — question paper with answers — page 3 of 8TNPSC குரூப் 4 / VAO 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2024 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
Kumaran bought a raincoat and saved Rs. 25 with discount of 20%. What was the original price of the raincoat?குமரன் 20% தள்ளுபடியுடன் ஒரு ரெயின்கோட்டை வாங்கி ரூ. 25 யை சேமித்தார் எனில், ரெயின்கோட்டின் அசல் விலை என்ன?
- Rs. 125ரூ. 125✓
- Rs. 250ரூ. 250
- Rs. 175ரூ. 175
- Rs. 150ரூ. 150
-
'தமிழ்ப் பெருங்காவலர்' என்ற சிறப்புப் பெயருக்குரியவர் யார்?
- மறைமலையடிகள்
- பேரா. தனிநாயகம்
- தேவநேயப்பாவாணர்✓
- உ.வே. சாமிநாதர்
-
The first modernised Jute Industrial Unit was established at ———— in West Bengal in 1855.1855-ல் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ———— என்னும் ஊரில் நவீனமயமாக்கப்பட்ட சணல் தொழிற்சாலை முதல் முறையாக உருவாக்கப்பட்டது.
- Burnpurபர்ன்பூர்
- Serampurசெராம்பூர்
- Cloasterகுளோஸ்டர்
- Rishraரிஷ்ரா✓
-
புறநானூறு – இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர்
- டாக்டர். கால்டுவெல்
- ஜி.யு. போப்
- பெர்சிவல் பாதிரியார்
- ஜார்ஜ் எல். ஹார்ட்✓
-
Arrange the following Committees in the correct chronological order:
I. G.V.K. Rao Committee
II. Balwant Rai Mehta Committee
III. L.M. Singhvi Committee
IV. Ashok Mehta Committeeகீழே கொடுக்கப்பட்டுள்ள குழுக்களை காலவரிசைப்படி எழுதுக :
I. ஜி.வி.கே. ராவ் குழு
II. பல்வந்த்ராய் மேத்தா குழு
III. எல்.எம். சிங்வி குழு
IV. அசோக் மேத்தா குழு- III, I, II, IVIII, I, II, IV
- IV, III, I, IIIV, III, I, II
- II, IV, III, III, IV, III, I
- II, IV, I, IIIII, IV, I, III✓
-
அகர வரிசைப்படுத்துக.
கேள்வர், பொளிக்கும், நசைஇ, போத்து, மஞ்ஞை, நல்குவர், சாவகர்- கேள்வர், சாவகர், நல்குவர், நசைஇ, பொளிக்கும், மஞ்ஞை, போத்து
- சாவகர், நசைஇ, நல்குவர், கேள்வர், பொளிக்கும், மஞ்ஞை, போத்து
- கேள்வர், சாவகர், நசைஇ, நல்குவர், பொளிக்கும், போத்து, மஞ்ஞை✓
- கேள்வர், சாவகர், நல்குவர், நசைஇ, பொளிக்கும், போத்து, மஞ்ஞை
-
கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
- அருளப்பன்✓
- யோவான்
- சந்தாசாகிப்
- சன்னியாசி
-
காந்தியடிகள் பெற்றோரிடம் அன்பாக நடந்துக்கொள்ள காரணமாக அமைந்த நூல் எது?
- பகவத் கீதை
- அன்பு உள்ளம்
- அரிச்சந்திர நாடகம்
- சிரவண பிதுர்பத்தி✓
-
'முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது' – என அழைக்கப்படும் காப்பியம் எது?
- கம்பராமாயணம்
- பெரியபுராணம்
- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்✓
-
பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்
- வலிமையற்றவர்
- கல்லாதவர்✓
- ஒழுக்கமற்றவர்
- அன்பில்லாதவர்
-
Pagoda was a ———— coin of Vijayanagar descent.விஜய நகரப் பேரரசில் அறிமுகமான ———— நாணயம் பகோடா எனப்பட்டது.
- Silverவெள்ளி
- Copperசெம்பு
- Bronzeவெண்கலம்
- Goldதங்கம்✓
-
'திருக்கேதாரப்' பதிகத்தைப் பாடியவர் யார்?
- அப்பர்
- சம்பந்தர்
- சுந்தரர்✓
- மாணிக்கவாசகர்
-
எதிர்ச்சொல் அறிதல் :
ஊக்கம்- ஆர்வம்
- உற்சாகம்
- சோர்வு✓
- தெளிவு
-
தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப்பரிசினைப் பெற்ற முதற்பாவலர்.
- வாணிதாசன்
- உவமைக் கவிஞர் சுரதா✓
- மு. மேத்தா
- ஈரோடு தமிழன்பன்
-
For the principal Rs.10,000 the rate of interest is 15 p.a. for 3 years. Find the difference between C.I and S.I.அசல் தொகை ரூ. 10,000 ஆனது 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயான வித்தியாசம் காண்க.
- 70.8670.86
- 708708
- 708.75708.75✓
- 775775
-
"The Swadeshi Steam Navigation Company" started with capital amount ofசுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியின் ஆரம்ப மொத்த முதலீட்டு தொகை
- Rs. 2 lakhரூ. 2 இலட்சம்
- Rs. 5 lakhரூ. 5 இலட்சம்
- Rs. 8 lakhரூ. 8 இலட்சம்
- Rs. 10 lakhரூ. 10 இலட்சம்✓
-
'திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்' – என்று கூறியவர் யார்?
- அண்ணல் அம்பேத்கர்
- முனைவர். எமினோ
- காந்தியடிகள்✓
- ஜி.யு. போப்
-
Name the author of book “Poverty and Un-British Rule in India”.“இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்” என்ற நூலின் ஆசிரியர்
- Bala Gangadhar Tilakபால கங்காதர திலகர்
- Gopala Krishna Gokhaleகோபால கிருஷ்ண கோகலே
- Dadabhai Naorojiதாதாபாய் நௌரோஜி✓
- M.G. Ranadeஎம்.ஜி. ரானடே
-
"ஓங்கு தண்பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்" இவ்வடியில் நீப வனம் என்பது
- கடம்பவனம்✓
- உவவனம்
- பாலைவனம்
- மலர்வனம்
-
What is the meaning of the word “Extinguish” when Valluvar tries to compare lust to “Pouring Ghee to Fire”?“நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல்” என்னும் குறளில் நுதுப்பேம் என்பதன் பொருள் என்ன?
- Put outஅவித்தல்✓
- Systemமுறைமை
- Lifeஆயுள்
- Expertiseபயில்வுடைமை
-
கீழ்க்கண்டவற்றில் ஒளவையார் இயற்றிய நூல்
- வெற்றி வேற்கை
- அருங்கலச்செப்பு
- நன்னெறி
- ஞானக்குறள்✓
-
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
- கடல்
- ஆழி
- பரவை
- ஆறு✓
-
'பகுத்தறிவுக் கவிஞர்' என்று புகழப்படுபவர் யார்?
- கவியரசர் கண்ணதாசன்
- உடுமலை நாராயண கவி✓
- கவிச்சக்கரவர்த்தி கம்பர்
- கவிவேந்தர் மு. மேத்தா
-
Arrange the chronological order. Following countries got highest point in the human development index in descending order (As on 2016)மனித மேம்பாட்டுக் குறியீட்டில் அதிக புள்ளிகள் பெற்ற நாடுகளை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக. (2016 ஆம் ஆண்டின் படி)
- 1. Norway
- 2. Switzerland
- 3. India
- 4. Australia
- 1. நார்வே
- 2. ஸ்விட்சர்லாந்து
- 3. இந்தியா
- 4. ஆஸ்திரேலியா
- 1 4 2 31 4 2 3✓
- 4 2 1 34 2 1 3
- 2 1 4 32 1 4 3
- 2 1 3 42 1 3 4
-
'உத்தர காண்டம்' எழுதியவர்
- ஒட்டக்கூத்தர்✓
- கம்பர்
- வில்லிபுத்தூரார்
- புகழேந்தி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →