Group 4 / VAO · 2024குரூப் 4 / VAO · 2024
TNPSC Group 4 / VAO 2024 — question paper with answers — page 5 of 8TNPSC குரூப் 4 / VAO 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 5 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2024 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க.
'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல'- பயனற்ற செயல்
- தற்செயல் நிகழ்வு
- தடையின்றி மிகுதியாக
- ஒற்றுமையின்மை✓
-
A person invested Rs.12,000 in a fixed deposit scheme for 2 years at the rate of 5% compound interest. How much amount will be got on maturity of the fixed deposit?ஒருவர் ரூ. 12,000 ஐ 5% கூட்டுவட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு திட்டத்தில் செலுத்துகிறார். நிரந்தர வைப்பு முதிர்வு தொகையாக அவர் எவ்வளவு பெறுவார்?
- Rs.13,200ரூ. 13,200
- Rs.13,430ரூ. 13,430
- Rs.13,230ரூ. 13,230✓
- Rs.12,600ரூ. 12,600
-
"வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பாடியவர்
- மகாகவி பாரதியார்
- கவிஞர் வாணிதாசன்
- பாவேந்தர் பாரதிதாசன்✓
- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
-
மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்- கூரை வேய்ந்தனர்✓
- கூரை முடைந்தனர்
- கூரை செய்தனர்
- கூரை வனைந்தார்
-
The LCM of two numbers is 6 times their HCF. If the HCF is 12 and one of the numbers is 36, then find the other number.இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா-வின் 6 மடங்காகும். மீ.பெ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றோர் எண்ணைக் காண்க.
- 2424✓
- 3434
- 1212
- 66
-
உப்பளத் தொழிலாளர் உவர்ப்பு வாழ்க்கையைக் குறிக்கும் புதினம்.
- அலைவாய்க் கரையில்
- கரிப்பு மணிகள்✓
- ஒரு கடலோர கிராமம்
- சேற்றில் மனிதர்கள்
-
"நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர்
- சங்கரதாச சுவாமிகள்
- ந. முத்துசாமி✓
- பம்மல் சம்பந்த முதலியார்
- கோமல் சுவாமிநாதன்
-
Which day is celebrated as overseas Indian's day?'வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்' எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
- November-9நவம்பர்-9
- December-9டிசம்பர்-9
- January-9ஜனவரி-9✓
- February-9பிப்ரவரி-9
-
Which of the following statements are true about the Himalayas?கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியாக இமயமலையுடன் தொடர்புடையது?
- (i) Zaskar, Ladakh, Kailash and Karakoram ranges are found in the trans − Himalayas.
- (ii) The Greater Himalayas receives lesser rainfall as compared to the lesser Himalayas and the Siwaliks.
- (iii) The Outer Himalayas is the most continuous range.
- (i) சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகிய முக்கியமான மலைத்தொடர்கள் ட்ரான்ஸ் இமயமலையில் அமைந்துள்ளது.
- (ii) சிறிய இமயமலை மற்றும் சிவாலிக் குன்றுகளை ஒப்பிடும்போது இப்பகுதி குறைவான மழையைப் பெறுகின்றது.
- (iii) வெளி இமயமலை மிகவும் தொடர்ச்சியான மலைத்தொடராக அமைந்துள்ளது.
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
பதினென் என்றால்
- 18✓
- 20
- 11
- 17
-
Who was honoured with such titles as Rao Sahib (1926), Rao Bahadur (1930) and Divan Bahadur (1936) for his selfless social services?தன்னலமற்ற சேவைக்காக ராவ் சாகிப் (1926), ராவ் பகதூர் (1930), திவான் பகதூர் (1936) ஆகிய பட்டங்களைப் பெற்றவர் யார்?
- Rettaimalai Srinivasanஇரட்டைமலை சீனிவாசன்✓
- Mylai Chinnathambi Rajaமயிலை சின்னதம்பி ராஜா
- M. Singaravelarம. சிங்கார வேலர்
- Dr. C. Natesanarடாக்டர். சி. நடேசனார்
-
Ram Prasad Bismil and Ashfaqulla Khan were arrested and tried in the ———— case.———— புரட்சிகர நடவடிக்கைகளுக்காக ராம்பிரசாத் பிஸ்மில் மற்றும் அஷ்ஃபாகுல்லா காணும் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
- Chittagong Armoury raidசிட்டகாங் ஆயுதக்கிடங்கு மீதானத் தாக்குதல்
- Kakori conspiracy caseகாகோரி சதி வழக்கு✓
- Lahore conspiracy caseலாகூர் சதி வழக்கு
- Bomb Throwing in the Central Legislative Assemblyமத்தியச் சட்டப் பேரவையில் புகைக்குண்டு வீசியதற்காக
-
காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம் அவரது மேடைப் பேச்சினை மொழிபெயர்த்தவர்.
- மு. வரதராசனார்
- ம.பொ. சிவஞானம்
- திரு.வி. கலியாணசுந்தரனார்✓
- சி.என். அண்ணாதுரை
-
Aksai Chin remains a disputed area between China and ————.அக்சாய் சின் ———— மற்றும் சீனாவிற்கு இடையே சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது.
- Bangladeshவங்கதேசம்
- Indiaஇந்தியா✓
- Nepalநேபாளம்
- Japanஜப்பான்
-
3 men and 4 women can earn Rs. 3,780 in 7 days. 11 men and 13 women earn Rs. 15,040 in 8 days. In what time will 7 men and 9 women earn Rs. 12,400?3 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் 7 நாள்களில் ரூ.3,780 சம்பாதிக்கின்றனர். 11 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் சேர்ந்து 8 நாள்களில் ரூ.15,040 சம்பாதிக்கின்றனர் எனில் 7 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் சேர்ந்து எவ்வளவு நாள்களில் ரூ.12,400 சம்பாதிப்பர்?
- 9 days9 நாள்கள்
- 12 days12 நாள்கள்
- 10 days10 நாள்கள்✓
- 11 days11 நாள்கள்
-
Which of the following statements are true about V.O. Chidambaram Pillai?கீழ்கண்ட கூற்றுகளில் வ.உ. சிதம்பரம் பிள்ளையை பற்றிய சரியான வாக்கியங்கள் எவை?
- (i) He was a follower of Gopalakrishna Gokhale.
- (ii) He was known as Chekkiluththa Chemmal.
- (iii) He founded the servants of India Society.
- (iv) He was a lawyer.
- (i) கோபாலகிருஷ்ண கோகலேவின் சீடர் ஆவார்.
- (ii) இவர் செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பட்டார்.
- (iii) இந்திய பணியாளர் சங்கத்தை தோற்றுவித்தார்.
- (iv) வழக்கறிஞர் ஆவார்
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
- (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்✓
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
-
இராசராச சோழனுக்கு கோயில் கட்டவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டிய கோயில் எது?
- இராமேஸ்வரம் கோயில்
- பல்லவ குடைவரைக் கோயில்
- மதுரை மீனாட்சி கோயில்
- இராசசிம்மேச்சுரம் கோயில்✓
-
இமிழிசை – இலக்கணக் குறிப்பு அறிக.
- பண்புத் தொகை
- வினைத் தொகை✓
- வினையாலணையும் பெயர்
- வினைமுற்று
-
Find the length of the longest pole that can be placed in a room 24 m long, 18 m broad and 16 m high.24 மீ நீளம், 18 மீ அகலம் மற்றும் 16 மீ உயரம் உள்ள ஒரு அறையினுள் வைக்க முடிந்த மிகப் பெரிய கம்பியின் நீளம் என்ன?
- 14 m14 மீ
- 24 m24 மீ
- 34 m34 மீ✓
- 44 m44 மீ
-
அகர வரிசைப்படுத்துக.
இசைக் கருவிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்துக.
படகம், தவில், கணப்பறை, உடுக்கை, நாகசுரம், மகுடி- தவில், படகம், கணப்பறை, நாகசுரம், மகுடி, உடுக்கை
- உடுக்கை, கணப்பறை, தவில், நாகசுரம், படகம், மகுடி✓
- படகம், உடுக்கை, மகுடி, நாகசுரம், கணப்பறை, தவில்
- நாகசுரம், கணப்பறை, உடுக்கை, தவில், மகுடி, படகம்
-
A fungus causing disease in plants is reported recently to cause infection in man isஅண்மையில் தாவரங்களில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சையானது மனிதர்களைத் தாக்கி நோய்த்தொற்று ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இதற்கு காரணமான பூஞ்சை எது?
- Plasmodiophora brassicaeபிளாஸ்மோடையோபோரா பிராசிக்கே
- Chondrostereum purpureumகாண்ட்ரோஸ்டிரியம் பர்பூரியம்✓
- Taphrina deformansடாப்ரினா டிபார்மன்ஸ்
- Puccinia graminis var-triticiபக்சினியா கிராமினிஸ் வார்-டிரிட்டிசை
-
பொருத்துக.
(a) மணிமேகலை 1. சேக்கிழார் (b) சிலப்பதிகாரம் 2. சீத்தலைச்சாத்தனார் (c) பெரியபுராணம் 3. பரஞ்சோதி முனிவர் (d) திருவிளையாடற் புராணம் 4. இளங்கோவடிகள் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
A woman reformer who was instrumental in Dr. Muthulakshmi's introduction of the Devadasi Abolition Actதேவதாசி முறை ஒழிப்பு சட்டம் கொண்டு வர டாக்டர். முத்துலட்சுமி அம்மையாருக்கு ஆணிவேராக இருந்த பெண் சீர்திருத்தவாதி
- Moovalur Ramamirtham Ammaiyarமூவலூர் இராமாமிர்தம் அம்மையார்✓
- Annie Besant Ammaiyarஅன்னிபெசன்ட் அம்மையார்
- Dr. Dharmambal Ammaiyarடாக்டர். தர்மாம்பாள் அம்மையார்
- Nagammaiyarநாகம்மையார்
-
சங்க இலக்கியங்களில் 'கரகாட்டம்' எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- குடக்கூத்து✓
- தெருக்கூத்து
- சக்திக்கரகம்
- உடுக்கை ஆட்டம்
-
"தாதாசாகேப் பால்கே" விருது முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
- 1965
- 1969✓
- 1990
- 1996
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →