Group 4 / VAO · 2018குரூப் 4 / VAO · 2018
TNPSC Group 4 / VAO 2018 — question paper with answers — page 3 of 8TNPSC குரூப் 4 / VAO 2018 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2018 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2018 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2018exam yearதேர்வு ஆண்டு
-
கண்ணதாசன் படைத்த நாடகம்
- மாங்கனி
- ஆட்டனத்தி ஆதிமந்தி
- கல்லக்குடி மகா காவியம்
- இராசதண்டனை✓
-
Which commission sets up international food standard?உணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட உலக தரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட கமிஷன் யாது?
- Codex Alimentations Commissionகோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன்✓
- Food and Agricultural Commissionஉணவு மற்றும் வேளாண்மைத் துறை கமிஷன்
- World Health Commissionஉலக சுகாதார கமிஷன்
- I.S.I.இந்திய தர குழுமம்
-
தொண்டு செய்து பழுத்தபழம் என்று பாரதிதாசன் போற்றுவது
- பாரதியார்
- தந்தை பெரியார்✓
- காந்தியார்
- அண்ணாதுரையார்
-
When was the Legal Services Authority Act (Lok Adalat) passed?உரிமை பணிச் சட்டம் (லோக் அதலத்) எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
- 19851985
- 19871987✓
- 19861986
- 19881988
-
Match the title winners with their championship of 2017:2017 இதற்கான பட்டம் வென்றவரையும், சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பொருத்துக:
(a) Ms. Saikhom Mirabai Chanu 1. World Junior (V 20) Chess Championship (b) Ms. Mary Kom 2. World Weightlifting Championship (c) Mr. Gopi Thonakal 3. Asian Women's Boxing Championship (d) Master Aravindh Chithambaram 4. Asian Marathon Championship (a) செல்வி. சாய்கோம் மீராபாய் சானு 1. உலக இளநிலை (V 20) சதுரங்க சாம்பியன்ஷிப் (b) செல்வி. மேரி காம் 2. உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் (c) திரு. கோபி தொனெக்கல் 3. ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் (d) செல்லன் அரவிந்த் சிதம்பரம் 4. ஆசிய மாராத்தான் சாம்பியன்ஷிப் - (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Mention the floriculture centre started recently under the Indo Israel joint agreement on agricultural project.சமீபத்தில் இந்திய-இஸ்ரேல் கூட்டு வேளாண்மை திட்டத்தின் கீழ் மலர் வளர்ப்பு மையம் எங்கு தொடங்கப்பட்டது?
- Thovalai, Kanyakumari Districtதோவாலை, கன்னியாகுமரி மாவட்டம்
- Thally, Krishnagiri Districtதளி, கிருஷ்ணகிரி மாவட்டம்✓
- Anna Nagar, Chennaiஅண்ணாநகர், சென்னை
- Connoor, Nilagiri Districtகுன்னூர், நீலகிரி மாவட்டம்
-
சொல்லைப் பொருளோடு பொருத்துக :
சொல் பொருள்- (a) வனப்பு 1. காடு
- (b) அடவி 2. பக்கம்
- (c) மருங்கு 3. இனிமை
- (d) மதுரம் 4. அழகு
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்
- சுவாமிநாத தேசிகர்✓
- வீரமாமுனிவர்
- சி. இலக்குவனார்
- மீனாட்சி சுந்தரனார்
-
Supply is constant inஅளிப்பு நிலையாக இருக்கும் காலம்
- Short periodகுறுகிய காலம்
- Very short periodமிக் குறுகிய காலம்✓
- Long periodநீண்ட காலம்
- Very long periodமிக நீண்ட காலம்
-
கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடு
- கரைவெட்டி
- கோவன்புத்தூர்✓
- வெள்ளோடு
- சித்திரங்குடி
-
தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு
- பண்புத்தொகை
- அன்மொழித்தொகை✓
- வினைத்தொகை
- உவமைத்தொகை
-
காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
- ஒராயிரத்து முப்பத்து நான்கு
- ஈராயிரத்து முப்பத்து நான்கு✓
- மூவாயிரத்து முப்பத்து நான்கு
- நான்காயிரத்து முப்பத்து நான்கு
-
Arun is now half as old as his father. Twelve years ago the father's age was three times as old as Arun. Now the present age of his father's age isஅருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப் போல் மும்மடங்காக இருந்தது. தற்போது தந்தையின் வயது
- 24 years24 ஆண்டுகள்
- 36 years36 ஆண்டுகள்
- 48 years48 ஆண்டுகள்✓
- 50 years50 ஆண்டுகள்
-
In Tamil Nadu which year TNEB was established on the basis of EB Act of 1948?1948-ம் ஆண்டு மின்பகிர்மான சட்டத்தின்படி தமிழகத்தில் எந்த ஆண்டு மின்சார வாரியம் (TNEB) அமைக்கப்பட்டது?
- 1957 July 11957 ஜூலை 1✓
- 1957 August 11957 ஆகஸ்ட் 1
- 1957 September 11957 செப்டம்பர் 1
- 1957 October 11957 அக்டோபர் 1
-
'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' – என அழைக்கப்படும் நகரம்
- திருநெல்வேலி
- தஞ்சை
- திருச்சி
- மதுரை✓
-
பொருத்துக:
- (a) பெருஞ்சித்திரனார் - 1. காவியப்பாவை
- (b) சுரதா - 2. குறிஞ்சித்திட்டு
- (c) முடியரசன் - 3. கனிச்சாறு
- (d) பாரதிதாசன் - 4. தேன்மழை
- 2 3 4 1
- 3 4 1 2✓
- 2 4 1 3
- 4 3 2 1
-
If y - 1/y = 6, find the value of y³ - 1/y³y - 1/y = 6 எனில் y³ - 1/y³ இன் மதிப்பைக் காண்க.
- 216216
- 222222
- 234234✓
- 228228
-
பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்
- கலிங்கத்துப்பரணி✓
- திருக்குறள்
- கம்பராமாயணம்
- பரிபாடல்
-
Which class of algae is used in the manufacture of dynamite?எந்த வகுப்பு ஆல்காக்கள் டைனமைட்டு உற்பத்தி செய்வதில் பயன்படுகின்றன?
- Chlorophyceaeகுளோரோபைசி
- Chrysophyceaeகிரைசோபைசி✓
- Cryptophyceaeகிரிப்டோபைசி
- Pheophyceaeஃபேயோபைசி
-
If -1 < r < 1, then the sum of infinite number of a geometric series is-1 < r < 1 எனில் முடிவிலி வரை பெருக்குத் தொடரின் கூடுதல்
- a(r^n - 1)/(r - 1)a(r^n - 1)/(r - 1)
- a(1 - r^n)/(1 - r)a(1 - r^n)/(1 - r)
- a/(1 - r)a/(1 - r)✓
- nana
-
Which monument depicted the similarity between Prakoy Literature and Dravida Literature?பிராகூய் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு
- Bengaliவங்காள
- Lisiarலிசியர்✓
- Caspiarகாஸ்பியர்
- Teluguதெலுங்கு
-
The birth of economics of education was announced byகல்வி பற்றிய பொருளியலை உருவாக்கியவர்
- Marshallமார்ஷல்
- Karl Marxகார்ல் மார்க்ஸ்
- Schultzஸ்கல்ட்ஸ்✓
- Keynesகீன்சு
-
The value of e^0 ise^0-வின் மதிப்பு
- ee
- 11✓
- 00
- ∞∞
-
The respiratory quotient of glucose in anaerobic respiration isகாற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸின் சுவாச ஈவு ______ ஆகும்.
- Oneஒன்று
- Fourநான்கு
- Infinityமுடிவற்றது✓
- Less than oneஒன்றுக்கு குறைவானது
-
If a/3 = b/4 = c/7 then (a + b + c)/c isa/3 = b/4 = c/7 எனில் (a + b + c)/c என்பது
- 77
- 22✓
- 1/21/2
- 1/71/7
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →